states

img

நடிகை சன்னி லியோனுக்கு எதிராகத் திரண்ட சாமியார்கள்!

போபால், டிச.27- நடிகை சன்னி லியோன் நடனமாடி யிருக்கும் வீடியோ ஆல்பத்திற்கு, அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா உள் ளிட்ட பாஜகவினரும், மதுராவிலுள்ள சாமியார்களும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். மதுபான் என்ற பெயரில் உருவாகி யிருக்கும், நடிகை சன்னி லியோனின் வீடியோ ஆல்பத்தை பிரபல இசை நிறுவனமான ‘சரிகம’ (Saregama) கடந்த புதனன்று வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வர வேற்பை பெற்றதுடன், தற்போது வரை 8 மில்லியன் பார்வைகளை தாண்டி யுள்ளது. ‘சரிகம’-வுக்கு யூடியூபில் 25 மில்லி யனுக்கும் அதிகமான ஃபாலோயர் கள் இருப்பதால், ‘மதுபான்’ ஆல்பம், இன்னும் பல லட்சம் பார்வைகளைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1960-இல் வெளியான கோஹி னூர் படத்தில் இடம்பெற்ற, ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ என்ற பாடலை, மதுபான் ஆல்பத்தில் ரீமிக்ஸ் செய் துள்ளனர்.

கிருஷ்ணாவுக்கும், ராதா வுக்கும் இடையேயான காதலை மைய மாக கொண்ட இந்த ரீமிக்ஸ் பாட லுக்கு சன்னி லியோன் நடனமாடியுள் ளார். கனிகா கபூர், அரிந்தம் சக்ர வர்த்தி ஆகியோர் இந்த பாடலை பாடி யுள்ளனர். இந்நிலையில், இந்த ரீமிக்ஸ் பாட லில்தான் இந்துக்கள் புனிதமாக மதிக்கும் கிருஷ்ணா, ராதாவை இழிவு படுத்தும் வரிகள் இருப்பதாகவும், சன்னி லியோன் தனது கவர்ச்சி ஆட்டம் மூலம் இந்துக் கடவுள்களை இழிவு படுத்தி விட்டார் என்றும் கூறி உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த சாமியார்கள் போராட்டம் நடத்தியுள்ள னர்.  சன்னி லியோன் பாடலை தடை செய்யாவிட்டால் நீதிமன்றத்திற்கும் செல்வோம் என்று கூறியுள்ளனர். இதேபோல மத்தியப் பிரதேச மாநில பாஜக உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவும், மதுபான் பாட லின் தலைப்பு மற்றும் பாடல் வரி களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  3 நாட்களுக்குள் அந்த வீடியோ வை அகற்றவில்லை என்றால் சட்டப் படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் மிரட்டியுள்ளார். சங்-பரிவாரங்களின் இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, அச்சம டைந்த ‘சரிகம’ நிறுவனம், தற்போது பாடலின் வரிகள் மற்றும் தலைப்பை மாற்றுவதாக அறிவித்துள்ளது.